2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பதுக்கினால் நடவடிக்கை

Princiya Dixci   / 2022 ஏப்ரல் 18 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்களில் எரிபொருளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருப்பவர்களை கைது செய்வதற்கு திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம். சதாத், இன்று (18) தெரிவித்தார்.

இச் சோதனையின் போது கைப்பற்றப்படும் எரிபொருள் அரச உடமையாக்கப்படுவதுடன், உரிய நபருக்கு எதிராக பாவனையாளர் அதிகார சபையினூடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ச்சியாக மக்களின் நீண்ட வரிசை காணப்படுகின்றது. இதற்கு காரணம் சிலர் எரிபொருளை தேவைக்கு அதிகமாக கொள்வனவு செய்து பதுக்கி வைப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு எரிபொருள் பதுக்கி வைத்திருப்போர்கள் சம்மந்தமாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .