Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
வி.சுகிர்தகுமார் / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதி அல்லது பிரதமராக சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் ஏன் பதவி வகிக்க முடியாது என, அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் கேள்வியெழுப்பினர்.
நாடளாவிய ரீதியில் சமுர்த்தி வங்கிகள் சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகளை நடத்தி வருகின்றது.
இதற்கமைவாக, அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஆலையடிவேம்பு தெற்கு மற்றும் வடக்கு வங்கிகள் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு, பனங்காடு பொது மைதானம், ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலய மைதானங்களில் நேற்று (22) நடத்தியது.
பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, க.கோடீஸ்வரன் எம்.பி இவ்வாறு கேள்வியெழுப்பினர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது,
“நியாயமாக எமக்குக் கிடைத்துள்ள எதிர்க்கட்சிப் பதவியையும் தலைவர் சம்மந்தன் ஜயாவையும் மாற்ற வேண்டுமென ஏன் இந்தப் பெரும்பான்மை சமூகம் நினைக்கின்றது. அவர்களது இவ்வாறான செயற்பாடுகள், இனவாதத்தைத் தூண்டுவதுடன் தமிழ் மக்களையும் பாதித்துள்ளது.
“இந்த நாட்டிலே அனைத்து இனங்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் எனக் கூறிக்கொள்ளும் நல்லாட்சி அரசாங்கம், வட, கிழக்கிலே வாழும் தமிழ் மக்களை ஏமாற்ற கூடாது.
“கடந்த ஆட்சியாளர்கள் செய்த அதே செயற்பாட்டை இந்த அரசாங்கமும் முன்னெடுக்க கூடாது என கோரிக்கை விடுக்கின்றேன்” என்றார்.
முகாமையாளர்களான கே.அசோக்குமார், க.கண்ணதாசன் ஆகியோரின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், பிரதேச சபைத் தவிசாளர் க.பேரின்பராசா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago