2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

படையினர் வசமுள்ள; காணிகளை மீளப்பெற நடவடிக்கை

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 நவம்பர் 07 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, காரைதீவு பிரதேச சபைக்குரிய படையினர் வசமுள்ள காணியை மீளப்பெறுவத்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் நேற்று (06)  தெரிவித்தார்.

காரைதீவு பிரதேச சபையின் விசேட அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை (02)  சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றபோது, இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த பல தசாப்தகாலமாக காரைதீவு பிரதான வீதியில், இராணுவம் முகாமிட்டுள்ள காணியை விடுவிப்பதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டபோது, சபை உறுப்பினர்கள் பூரண ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த ஆட்சிக்காலத்தில், மாறிமாறி சிறுபான்மையினர் தொடர்ந்து ஏமாற்றப்பட்டேவந்திருக்கின்றனர் அதுவே வரலாறு. சிலர் பதவிக்காக அடிமையாகின்றனர். அதனை ஆட்சியாளர் பயன்படுத்திவந்துள்ளனர். ஆதலால் எமக்கான உரிமைகள் யாவும் தாமதிக்கப்பட்டன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  முன்வந்து வடக்கு - கிழக்கு காணியை விடுவிக்க நடவடிக்கை எடுத்திருப்பது நல்லசகுனம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .