Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 மே 30 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தொட்டாச்சுருங்கி புதுக் காட்டுவெளிவட்டை நெற்செய்கைக் காணிகளை மீள வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக, நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் தவராசா கலையரசன், நேற்று (29) தெரிவித்தார்.
பெரும்பான்மை இனத்தவர்களால், 1980ஆம் ஆண்டு அத்துமீறிப் பிடிக்கப்பட்டுள்ள 164 ஏக்கர் வயல் காணிகளை, உரிய சிறுபான்மையின மக்களுக்கு மீளப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைக்கே அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மல்வத்தை - 2 கிராம உத்தியோத்தர் பிரிவில் அமைந்துள்ள தொட்டாசுருங்கி கண்டத்தில் சொந்தமான 164 ஏக்கர் வயல் காணிகளை அத்துமீறிப் பிடித்து, அதில் வேளாண்மை செய்து கொண்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காணிகளை அத்துமீறிப் பிடித்தவர்களுக்கு எதிராக, 1983இல் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டு, அவ்வழக்கில் காணிச் சொந்தக்காரர்கள் சிலருக்கு குறித்த காணிகளை உரியவர்களுக்கு மீள வழங்கும்படி, நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால், அக்காலத்தில் நிலவிய ஆயுத மோதல் காரணமாக, நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தமுடியாமல் போய்விட்டது.
இக்காணிகளை இழந்த மக்கள், 1990ஆம் ஆண்டு தொடக்கம் 1994ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, அகதிமுகாமில் வாழ்ந்து, பின்னர் மீள குடியமர்த்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago
4 hours ago