2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

நிந்தவூரில் தொழிற்பயிற்சி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Editorial   / 2023 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.நிப்றாஸ்


நிந்தவூர் மாவட்டத் தொழிற்பயிற்சி நிலையத்தில் முழுநேர மற்றும் பகுதிநேர கற்கைநெறிகளை பூர்த்தி செய்த மாணவ மாணவியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த புதன் கிழமை மேற்படி பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

தொழிற்பயிற்சி அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் ஏ.ஏ.ஜாபீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

இங்கு உரையாற்றிய பைசல் காசிம் எம்.பி., பல்மொழி அறிவுடனான தொழிற்கல்வியின் முக்கியத்துவம் அதனூடாக இளைஞர், யுவதிகள் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் பற்றி குறிப்பிட்டார்.

அரச அங்கீகாரத்துடனான தேசிய தொழிற் தகமை (என்.வி.கி.) சான்றிதழ்களை வழங்கும் 9 முழுநேர பயிற்சி நெறிகளைக் கொண்டியங்கும் நிந்தவூர் - மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில், ஆங்கிலம் உள்ளிட்ட மேலும் பல பகுதிநேர (சான்றிதழ் மட்ட) பயிற்சிகளும் நடாத்தப்படுகின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X