Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 02 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
நிந்தவூர் பிரதேசத்தில் தற்பொழுது ஏற்பட்டுள்ள உக்கிர கடலரிப்பு காரணமாக கடற்கரையை அண்டி வாழும் பொதுமக்கள் பல அசௌகரீகங்களை எதிர்கொண்டுள்ளனர்.
கடலை அண்டிய பகுதிகள் கடல் நீரால் அடித்துச் செல்லப்பட்டுள்ளதோடு, தென்னை மரங்களும் மீனவர்களின் மீன்பிடி வாடிகளும், கடல் நீரால் காவுகொள்ளப்படுகின்றன.
இதனால் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மீனவர்களின் இயந்திரப் படகுகள், தோணிகளை கடற்கரை ஓரம் நிறுத்த முடியாது, மேட்டுப் பகுதிகளுக்கு நகர்த்த வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளதாகவும், மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடற்கரை அண்டியுள்ள பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பொது கட்டடங்கள், மீனவர் தங்குமிடம் போன்றவையும் பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடலரிப்பை தடுப்பதற்கு கடலோரம் பேணல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் என்பன இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
எனவே, நிந்தவூர் பிரதேசம் எதிர்நோக்கியுள்ள இக் கடலரிப்பை கட்டுப்படுத்துவதற்கு சம்மந்தப்பட்ட தரப்பினர் தாமதமின்றி காதத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago