Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை
Freelancer / 2023 மார்ச் 03 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற நிதிமோசடி தொடர்பான விடயங்களை தவறாக பலர் பரப்பிவருகின்றார்கள் என கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பாக விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் சந்திப்பு வியாழக்கிழமை(2) இரவு கல்முனை மாநகர சபை பொதுமண்டபத்தில் இடம்பெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் கருத்து
கல்முனை மாநகர சபையில் நிதிக்கையாடலில் ஈடுபட்ட ஊழியர்கள் தொடர்பாக புதிய ஆதாரம் தற்போது சிக்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பின்னணியில் யார் இருப்பினும் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்கமைய ஆணையாளர் தலைமையில் விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு நிதி கையாடல் சம்பவங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ரோசன் அக்தர்
மாநகர சபையில் இடம்பெற்ற நிதிக்கையாடல் விடயங்களை பொதுவெளியில் பேசுவதை தவிர்த்து ஆக்க பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அனைவரும் ஒத்துழைப்புகளை வழங்க வேணடும். சம்பந்தரப்பட்டவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் சிலர் காழ்ப்புணர்ச்சியினால் பொதுவெளியில் பேசி வருகின்றனர். வெளிநாடுகளுக்கு அவர்கள் தப்பி செல்லாத வகையில் பொலிஸார் நீதிமன்ற உத்தரவினை பெற்று நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.எனவே எமது கட்சி தலைவர் எமது பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு சேறு அடிப்பதற்கு சிலர் சோடிக்கப்பட்ட கதைகளை பரப்பி வருவதானது அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு ஒப்பானது என தெரிவிக்க விரும்புகின்றேன் என்றார்.
கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.சி சத்தார் கருத்து
எமது கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற நிதிமோசடி தொடர்பான விடயங்களை தவறாக பலர் பரப்பிவருகின்றார்கள்.ஆனால் மாநகர சபையில் ஒரு நிதி கையாடல் இடம்பெற்றிருக்கின்றது.எமது மாநகர நிதிப்பிரிவில் இருந்த ஊழியர்களினால் இடம்பெற்றுள்ளது.இந்த ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்ட இச்செயற்பாட்டில் எமது முதல்வருக்கோ எமது உறுப்பினர்களுக்கோ எவ்விதமான சம்பந்தமும் இல்லை.5 வருடங்களாக சபையை நாம் வழிநடத்துகின்றோம்.ஒவ்வொரு வருடம் கணக்காய்வு பிரிவினர் வருகை தந்து கணக்குகளை ஆராய்வார்கள்.மத்திய அரசு மாகாண அரசில் இருந்து இவர்கள் வருவார்கள்.4 முதல் 5 தடவை இவ்வாறு வருகை தந்து கணக்குகளை ஆராய்வார்கள்.அவர்களது அறிக்கையை தான் நாங்களும் நம்பலாம்.நாங்கள் உட்பட எமது முதல்வர் கூட வரிப்பணம் மேற்கொள்கின்ற இடத்திற்கு சென்று பார்க்க முடியாது.இதற்காக கணக்காளர் உட்பட உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.அவர்கள் அதை ஒழுங்கு படுத்துவார்கள்.நிர்வாகத்தில் ஏற்படுகின்ற களவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல.தற்போது வெளிவந்துள்ள நிதிமோசடி தொடர்பில் வங்குரோத்து அரசியல்வாதிகள் சிலர் எங்கள் மீது சேறு பூசுகின்றார்கள்.எங்கள் பாராளுமன்ற உறுப்பினர் மீதும் சேறுபூசுகின்றார்கள்.இது அரசியலில் எடுபடாது.ஏனெனில் கடந்த 23 வருடங்களாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மாநகர சபையை வழிநடத்தி வருகின்றது.இன்னும் 40 முதல் 60 வருடங்களுக்கு கூட கல்முனை மாநகர சபையை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தான் ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார்.
இச்செய்தியாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் உறுப்பினர்களான சட்டத்தரணி ரோசன் அக்தர் ஏ.சி சத்தார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
21 Dec 2024