Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2018 நவம்பர் 04 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று நாட்டின் ஜனாதிபதியை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் துறோகியாகவே அனைவரும் பார்க்கின்றார் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான யூ.கே.ஆதம்லெப்பை தெரிவித்தார்.
இவ்வாறு, துறோகம் செய்பவர் ஒரு நாட்டிற்கு ஜனாதிபதியாக இருக்க முடியாது என்பதே அனைவரதும் கருத்தாகவும் உள்ளதென அவர் மேலும் கூறினார்.
நாட்டின் நிரந்தர ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதற்கும், ஐ.தே.க அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவதற்குமான சர்வமத வழிபாடும், விசேட பிரார்த்தனையும் நேற்று (03) மாலை அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள பொத்துவில் தொகுதிக்கான பிரதான காரியாலயத்தில் நடைபெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார்.
எமது நாட்டை இருள் சூழ்ந்திருந்த ஒரு நிலையிலிருந்து மீட்டெடுத்து, ஒரு ஸ்திரத்தன்மையை அடையும் நிலையில், ஜனாதிபதிக்கு வாக்களித்த மக்களுக்கும், நம்பிக்கை வைத்திருந்த சிறுபான்மை சமூகத்திற்கும் நம்பிக்கை துறோகம் இழைத்திருப்பது நாட்டின் வரலாற்று துறோகமாகவே அனைவராலும் பார்க்கப்படுகின்றது.
இந்த சதி முயற்சியை தோற்கடிப்பதற்கு, நாட்டு மக்கள் மட்டுமல்லாது சா்வதேசமும் கைகோர்த்துள்ள அதேவேளை இந்த நாட்டுக்காகவும், நாட்டுமக்களுக்காகவும் அனைத்து இன மக்களும் பிரார்த்தனை செய்து வழிபாடுகளிலும் ஈடுபட வேண்டுமெனவும் அவா் கேட்டுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago