2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

நகைக்கடை வியாபாரிகளுக்கு பிரச்சினையா? உடன் அழைக்கவும்

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

நகைக்கடை வியாபாரிகள் தற்போது முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் விழிப்பூட்டல்  கலந்துரையாடல், கல்முனை தலைமையக கேட்போர் கூடத்தில் நேற்று (20) மாலை இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர்  தலைமையில் இடம்பெற்றது

நாட்டில் தற்போது நிலவி வருகின்ற பொருளாதார நெருக்கடியில் நகைகடை உரிமையாளர்கள் மற்றும் நகை அடகு பிடிப்பாளர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள், நகைக்கடைகளில் பணியாற்றும் பணியாளர்களின் விவரங்கள் தொடர்பில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.

மேலும், நகைக்கடை வியாபாரிகள் மற்றும் அடகுபிடிப்பாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதற்கு 0718591161 அல்லது 0672229226  என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அறியத்தருமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டனர்.

நகை கடை உரிமையாளர்கள் மற்றும் நகை அடகு பிடிப்பாளர்கள் இக்கலந்துரையாடலில் பங்கு பற்றி, தத்தமது கருத்துகளை பகிர்ந்து கொண்டதுடன், தமது நலனில் அக்கறை எடுத்து செயற்படவுள்ள கல்முனை தலைமையக பொலிஸாருக்கு நன்றிகளையும் தெரிவித்து கொண்டனர்.

மேற்படி கலந்துரையாடலானது கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகரும் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ.வாஹிட் நெறிப்படுத்தியதுடன், சித்திக் கல்முனை வர்த்தக சங்க தலைவர் கே.எம்.எம். சித்தீக் உட்பட நகை கடை உரிமையாளர்கள் மற்றும் நகை அடகு பிடிப்பாளர்கள் எனா் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X