2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

தோணா அபிவிருத்தி ஆரம்பித்துவைப்பு

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 நவம்பர் 06 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி, நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டத்தின் முதலாம் கட்ட இரண்டாம் பிரிவு வேலைத்திட்டம் சுமார் 30 மில்லியன் 55 இலட்சம் ரூபாய் செலவில் நேற்று (05) ஆரம்பித்துவைக்கப்பட்டது.

2016.10.11 ஆம் திகதிய அமைச்சரவை தீர்மானத்துக்கு அமைவாக, சாய்ந்தமருது தோணா அபிவிருத்திக்காக 160 மில்லியன் 20 இலட்சம் ரூபாய் நிதியைச் செலவு செய்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியிருந்தது.

இதில் கடந்த வருடம் சுமார் 30 மில்லியன் ரூபாய் செலவில் தோணாவின்இரு மருங்கிலும் கல் சுவர்கள் அமைக்கப்பட்டன. இதன் அடுத்த கட்ட பணிகளுக்கே மேற்படி நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை காணி மீட்டல் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தால் முன்னெடுக்கப்படும் குறித்த வேலைத்திட்டம், இவ்வருட இறுதிக்குள் நிறைவுபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .