2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

தொழிற்சாலையில் கொள்ளை; ஐவர் கைது

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 22 , பி.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

அம்பாறை - காரைதீவு பொலிஸ் எல்லைக்குட்பட்ட மாவடிப்பள்ளி  பகுதியில் உள்ள உருக்கு இரும்பு தொழிற்சாலையில் சுமார் ஒரு கோடியே 50 இலட்சம்  பெறுமதியான மோட்டார் மற்றும்  மின் உபகரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 21, 25, 36 , 48 , 34 வயதுகளையுடைய ஐவர், இன்று (22) கைதுசெய்யப்பட்டுள்ளனர் என  காரைதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தொழிற்சாலையின் பாதுகாப்புக்காக போடப்பட்ட பூட்டுக்கள் நேற்று (21) அதிகாலை  உடைக்கப்பட்டு, நுணுக்கமாக பொருட்கள் கொள்ளையிடப்பட்டிருந்தன.

இதனை தொடர்ந்து தொழிற்சாலையின் உரிமையாளர், காரைதீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கினார்.

குறித்த முறைப்பாட்டுக்கமைய, கொள்ளைச் சம்பவத்தில் பிரதான சந்தேகநபர்  இனங்காணப்பட்ட நிலையில், அவரை தொலைபேசி ஊடாக தொடர்புகொண்ட பொலிஸ் குழு, அவரை அணுகி புலனாய்வு நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்நிலையில், பல வருடங்களாக குறித்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்த  சந்தேகநபர், நேற்று அதிகாலை கைதானதுடன், கொள்ளைச் சம்பவத்துக்கு உடந்தையாக செயற்பட்ட ஏனைய நால்வரும் கைதாகினர்.

இவ்வாறு கைதான சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய, கொள்ளையடித்துச் செல்லப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X