Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 மார்ச் 15 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.எம்.ஐ, ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.எல்.எஸ்.டீன்
தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாவுக்கு எதிராக, அக்கரைப்பற்று பிரதேச வீதிகளில், நேற்று (14) மாலை டயர்கள் எரிக்கப்பட்டு, அவரது புகைப்படங்களைத் தாங்கிய பதாதைகளுக்கும், அக்கட்சியைச் சேர்ந்த சில அதிருப்தியாளர்களால் தீ இட்டுக்கொளுத்தப்பட்டன.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அக்கரைப்பற்று மாநகர சபைக்காகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் மேயர் மற்றும் பிரதி மேயர் பதவிகளை கட்சியின் தலைமை, நேற்று (14) உத்தியோகபூர்வமாக அறிவித்த போதே, இந்த எதிர்ப்புச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டது.
அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயராக, தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் மகன் அதாஉல்லா அகமட் ஸக்கி, இரண்டாவது முறையாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்பதுடன், பிரதி மேயராக அஸ்மி அப்துல் கபூர், கட்சியின் தலைமையால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேயர், பிரதி மேயர் பதவிகள், தங்களுக்கு வழங்கப்படுமென கட்சியால் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது எனவும், அதற்கு மாறாகவே வேறு நபர்களுக்கு அப்பதவிகள் வழங்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்து, அவ்விருவரும் அவர்களின் ஆதரவாளர்களுமே இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் என, கட்சி முக்கியஸ்தர்கள் குறிப்பிட்டனர்.
இச்சம்பவத்தையடுத்து, அக்கரைப்பற்று பொலிஸார் மற்றும் இரானுவத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, தீயை அணைத்து, நிலைமையைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.
இதேவேளை, அட்டாளைச்சேனை பிரதேச சபையை அமைப்பதற்காக, எந்தவொரு கட்சியும் பெரும்பான்மைப் பலத்தை பெற்றிருக்கவில்லை. இதனால் கூட்டு ஆட்சி அமைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இச்சபை தள்ளப்பட்டுள்ளது.
தேசிய காங்கிரஸில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான அதிக வாய்ப்பு உள்ள போதிலும், இதனை தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா விரும்பவில்லை. முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைத்தாலும், அகில இலங்கை மக்கள் காங்கிஸுடன் இணைவதில்லை என்ற நிலைப்பாடு இருந்து வருகிறது என, கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago