2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

தேங்காய் தட்டுப்பாட்டுக்குத் தீர்வு

பைஷல் இஸ்மாயில்   / 2017 நவம்பர் 20 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

“குறுகிய காலங்களில் காய்க்கும் தென்னை மரங்களை வழங்கி, வீட்டுத்தோட்டங்களில் நடுவதன் மூலம் தேங்காய்  உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, நாட்டில் தற்போது நிலவி வருகின்ற தேங்காய் தட்டுப்பாட்டை எதிர்காலத்தில் முழுமையாக ஒழிக்க முடியும்” என, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவித்தார்.

அம்பாறை பிராந்திய தென்னை பயிர்ச்செய்கை சபையில் சம்மாந்துறை பிரதேசத்தில் 1,000 குடும்பங்களுக்கு தென்னங் கன்றுகள் வழங்கும் நிகழ்வு,

தென்னை பயிர்செய்கை சபையின் அம்பாறை மாவட்ட பிராந்திய முகாமையாளர் எஸ்.ஐ.சுசந்த தலைமையில் சம்மாந்துறையில் நேற்று (19) நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போது, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஒரு தேங்காய், 120 ரூபாய் முதல் 140 ரூபாய் வரை இன்று விற்பனை செய்யப்படுகின்றது. அன்றாடம் கூழித்தொழில் செய்து வருகின்ற குடும்பங்களால் அன்றாட வாழ்க்கையை ஓட்டுவது மிகக் கடினமாக இருக்கின்றபோது, தேங்காய் ஒன்றுக்கு 140 ரூபாய் விலை கொடுத்து எவ்வாறு வாங்க முடியும்?

“இந்நிலைமை எதிர்காலங்களில் எமது சமூகத்துக்கு தோன்றக் கூடாது என்பதற்காகவே, இத்திட்டத்தை எமது அரசாங்கம் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் திவிமகட காப்புறுதித் திட்டத்தின் கீழ் முன்னெடுத்து வருகின்றது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .