Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 பெப்ரவரி 05 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், நாளை 06ஆம், நாளை மறுதினம் 07ஆம் திகதிகளில் 48 மணித்தியால பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனரென, தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் செயலாளர் வை. முபாறக், நேற்று (04) தெரிவித்தார்.
மொழித்தேர்ச்சிக் கொடுப்பனவு, காப்புறுதிச் சேவைகள், சொத்துகளுக்கான கடன் எல்லையை அகற்றுதல், உரிய ஓய்வூதிய முறையை உருவாக்குதல், பதவி உயர்வுகளுக்கான வரையறைகளை நீக்குதல், சம்பள உயர்வுகளில் காணப்படும் வேறுபாடுகளை நீக்குதல், ஆட்சேர்ப்பு நடைமுறைகள் என்பவற்றுக்குத் தீர்வுகள் வழங்கப்படவேண்டும் என, கல்விசாரா ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்கோரிக்கைகளுக்கு, இதுவரையில் சரியான தீர்வு வழங்கப்படவில்லை எனவும் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரியுமே, இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேற்படி எமது கோரிக்கைகளுக்கு சாதகமான தீர்வு வழங்காவிடின் அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சம்மேளனம், அனைத்துப் பல்கலைக்கழங்கங்களிலும் தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சம்ளேமனம், உயர் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆகியோருடன் கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் சரியான தீர்வு கிடைக்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
27 Apr 2025
27 Apr 2025
27 Apr 2025