Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2018 செப்டெம்பர் 26 , பி.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
அட்டாளைச்சேனை மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளா் பிரிவுகளில் மீள்குடியேறியுள்ள மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குமாறு கோரி, பிரதேச செயலாளர்களிடம் கிழக்குச் சூரியன் பெண்கள் அமைப்பால் இன்று (26) மகஜர் வழங்கி வைக்கப்பட்டது.
அட்டாளைச்சேனை, மீள்குடியேற்றக் கிராமமான அஸ்ரப் நகர், ஆலையடிவேம்பு பிரதேசங்களில், வாழும் மக்களுக்கான வீடுகள், போக்குவரத்து வசதிகள், குடிநீர் வசதிகள், மின்சார வசதிகள் மற்றும் மலசலகூட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மிகக் குறைந்தளவிலேயே காணப்படுவதாகவும், பலர் எவ்வித வசதிகளுமின்றி வாழ்ந்து வருவதாகவும் அம்மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, யானைகளின் அச்சுறுத்தல், ஏனைய பிரதேசங்களிலிருந்து திண்மக்கழிவுகளை இங்கு கொண்டுவந்து கொட்டுவதால் ஏற்படும் பல சுகாதார சீர்கேடுகளுக்கும் மக்கள் உள்ளாகிவருகின்றனர“ எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இப்பிரதேசங்களில் சிறந்த வசதிகள் கொண்ட பாடசாலைகளும் அமையப் பெறாமையும் குறைபாடாக இருந்து வருகின்றமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த மீள்குடியேற்ற மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வொன்றைத் துரிதமாக வழங்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago