Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 30 , பி.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம்.ஷினாஸ்
தீய சக்திகளின் கரங்கள், தமிழர்களுக்கு அபாய எச்சரிக்கையாகுமென, அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளர் ஆர்.தர்மலிங்கம், தமது வட்டார ஆதரவாளர்களுடன், இன்று (30) அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பெரமுன கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும், கரையோரப் பிரதேச இணைப்பாளருமான பி.எச்.பியசேனவை, அவரது காரியாலயத்தில் சந்தித்து, புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
இங்கு உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்,
மஹிந்த ராஜபக்ஷ, அவரது ஆட்சிக் காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் மட்டுமல்லாமல், இலங்கை முழுவதும் கட்சி வேறுபாடு பாராமல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கினார்.
“கடந்த காலத்தில் செய்தது போல், இனி வரும் காலத்திலும் மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களைப் பலப்படுத்தி, முழு நாட்டையும் கட்டியெழுப்புவோம் வாருங்கள். எமது மக்களுக்கு அளப்பெரிய சேவையாற்ற தமிழ் மக்கள் முன்வர வேண்டும்.
“தமிழ்ப் பிரதேசங்களில், தீய சக்திகளின் கரங்கள் தான் ஓங்கி நிற்கிறன. எனவே, எம்மக்களைத் தீய சக்திகளிடமிருந்து மீட்டெடுத்து, அவர்களது வாழ்வு வளம் பெற மேம்பட இறுதிவரை உழைப்பேன்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago