2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

திருக்கோவில் பிரதேசத்தில் பட்டதாரி நியமனங்கள்

Princiya Dixci   / 2021 ஜனவரி 31 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைத் திட்டத்தின் ஊடாக அரசால் வழங்கப்பட்டு வரும் பட்டதாரி பயிலூனர்களுக்கான இரண்டாம் கட்ட அரச நியமனங்கள், திருக்கோவில் பிரதேசத்தில் இன்று (31) வழங்கப்பட்டன.

திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் முதற்கட்ட நியமனங்களில் பெற்றுக்கொள்ள தவறிய 09 பட்டதாரிகளுக்கே, பட்டதாரி பயிலூனர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று வழங்கப்பட்டன.

இந்நிகழ்வு, திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் தலைமையில் நடைபெற்றதுடன், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் பிரதம அதிதியாககக கலந்துகொண்டு, பயிலூனர் நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.

உதவிப் பிரதேச செயலாளர் கே.சதீசேகரன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.அனோஜா, சமூர்த்தி தலைமை முகாமையாளர் பி.பரமானந்தம் எனப் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .