2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

வி.சுகிர்தகுமார்   / 2018 ஒக்டோபர் 10 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் இ.வி.கமலராஜன் சுகயீனமுற்று அம்பாறை பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயர் குருதி அழுத்தம் காரணமாக நேற்று(09) இரவு  திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலையின், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில், அவரது நலம் வேண்டி திருக்கோவில் தேவசேனாதிபதி அமைப்பினர் உள்ளிட்ட பொதுமக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இ.வி.கமலராஜன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் திருக்கோவில் பிரதேச சபைக்காக போட்டியிட்டு வெற்றிப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .