2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் பதவி கூட்டமைப்பு வசம்

எஸ்.கார்த்திகேசு   / 2018 மார்ச் 29 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை, திருக்கோவில் பிரதேச சபைக்கான முதலாவது அமர்வு, பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் இன்று (29) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.

இதன்போது, திருக்கோவில் பிரதேச சபைக்குத் தெரிவாகியிருந்த 16 உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர் என்பதுடன், கட்சிகளின் செயலாளர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், சபையில் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோர்களுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

தவிசாளர் பதவிக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தெரிவாகிய முன்னாள் தவிசாள் வி.புவிதராஜன் மற்றும் இ.வி.கமலராஜன் ஆகியோர் போட்டியிட்டிருந்தனர்.

இதன்போது இ.வி.கமலராஜனுக்கு 09 வாக்குகளும், வி.புவிதராஜனுக்கு 07 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதற்கமைய, இ.வி.கமலராஜன்  தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

இதயடுத்து, சபைக்கான உதவி தவிசாளர் பதவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கோ. காந்தரூபன் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் எஸ்.விக்கினேஸ்வரன் ஆகிய இருவரும் போட்டியிட்டு இருந்தனர்.

இதன்போது, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் எஸ்.விக்கினேஸ்வரன் 10 வாக்குகள் கிடைக்கப்பெற்ற நிலையில்,  எஸ்.விக்கினேஸ்வரன உதவி தவிசாளராகத் தெரிவாகினார்.

திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் இ.வி.கமலராஜன், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், கட்சி பேதங்கள் இல்லாமல் திருக்கோவில் பிரதேசத்தில் ஊழலற்ற நடுநிலையாக தம்பட்டை தொடக்கம் தாண்டியடி வரையான 10 வட்டாரங்களையும் தன்னால் முடிந்தளவு அவிருத்தி செய்வதோ, அனைத்து சபை உறுப்பினர்களின்  ஒத்துழைப்புடன் நேர்மையான சபையாக திருக்கோவில் பிரதேச சபையை முன்னெடுக்கவள்ளதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X