Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
எஸ்.கார்த்திகேசு / 2018 ஏப்ரல் 18 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, திருக்கோவில் அதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் தங்களின் கடமைகளை மேற்கொள்வதில் சிலர் தடைகள் ஏற்படுத்தும் வகையில் கருத்துகளைத் தெரிவித்து வருவதாகக் கூறி, வைத்தியர்கள், இன்று (18) பணிப் பஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், வைத்தியசாலைக்கு வரும் வெளி நோயாளர்கள் தங்களின் நோய்களுக்கான மருத்தவ நிவாரணங்களை பெற்றுக்கொள்ள முடியாது சிரமப்படுகின்றனர்.
அத்தோடு, பணமில்லாத காரணத்தால் வெளியில் மருந்து பெறமுடியாது, நோயால் துன்பப்பட்டு வீட்டுக்குச் செல்வதாக வெளி நோயாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் பி.மோகனகாந்தனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, கடந்த சித்திரை புதுவருட தினத்தன்று(14) நடந்த விபத்துச் சம்பவத்தைத் அடுத்து, ஆதார வைத்தியசாலையில் கடமை புரிகின்ற வைத்தியர்களுக்கு சிலர் பல்வேறு முறையற்ற வார்த்தைப் பிரயோகங்களை சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தியுள்ளனர்.
அதன் காரணத்தால் மனமுடைந்த வைத்தியர்கள் தாங்கள் இங்கு தொடர்ந்து பணிபுரிவது சிரமமான காரியமாக அமையும் எனத் தெரிவித்து, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கு முறைப்பாடு பதிவு செய்வதற்காகச் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, நோயாளிகளின் நலன் கருதி வைத்தியசாலையின் அவரசரச் சிகிச்சைப் பிரிவு மற்றும் வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ நடவடிக்கைகளை தான் தற்போது முன்னெடுத்து வருவதாகவும் வைத்திய அத்தியட்சகர் பி.மோகனகாந்தன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இந்நிலையில், வைத்தியசாலையின் பிரச்சினைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட வைத்தியர்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் விசேட கலந்தரையாடல் ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களுடன் சந்திப்பு மேற்கொள்ளும் வகையில் திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர் இ.வி.கமலராஜன் தலைமையிலான ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு, கல்முனைக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago