2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

திருக்கோவிலில் 41 பேருக்கு டெங்கு

எஸ்.கார்த்திகேசு   / 2018 ஜூலை 23 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட பிரதேசத்தில், கடந்த ஜனவரி மாதம் முதல் இம்மாதம் நடுப்பகுதி வரையிலான காலத்துக்குள் 41 பேருக்கு டெங்குக் காய்சல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நோயாளர்களில், அநேகமானவர்கள் வெளி மாவட்டங்களுக்குச் சென்று வீடு திரும்பியவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையை அண்டிய சூழலில் டெங்கு நுளம்புகள் அதிகம் இருக்கக்கூடுமென சந்தேகப்படுவதுடன், டெங்குத் தொற்றுகளைத் தடுப்பதற்கான விசேட நடவடிக்கைகளையும் திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் முன்னெடுக்கவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .