2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

தாய்மார்களுக்கான போஷாக்கு மேம்பாட்டு தேசிய வேலைத்திட்டம்

Freelancer   / 2023 ஏப்ரல் 12 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஸாகிர்

கல்முனையில் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான போஷாக்கு மட்டத்தை  மேம்படுத்தி, ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டம் - 2023, மாவட்ட சமூர்த்திப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். சப்றாஸின் பணிப்புரைக்கமைய, கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலியின் வழிகாட்டலில், மருதமுனை சமூர்த்தி வங்கியில்  நேற்று செவ்வாய்க்கிழமை (11) ஆரம்பிக்கப்பட்டது.

சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் ஏ.எல்.எம். நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கர்ப்பிணித் தாய்மாருக்கு குடும்ப நல உத்தியோகத்தர்களால் போஷாக்கு பற்றிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. 

வங்கி கட்டுப்பாட்டு சபை தலைவர் என்.எம்.யு.சத்தார், பிரதித் தலைவர் எம்.ஐ.எம். சாஹிர் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் ஏ.எல்.எம். நஜீம், கர்ப்பிணித் தாய்மாருக்கான 10,000 ரூபாய் கொடுப்பனவுகளை வழங்கி வைத்தார்.

இதன்போது 264 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 264,000 ரூபாய் கொடுப்பானவாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X