Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
பைஷல் இஸ்மாயில் / 2018 ஏப்ரல் 18 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழர்களைப் பொறுத்தவரையில், நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மொத்தமாக 98 ஆசனங்களைப் பெற்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி) இரண்டாவது மிக பெரிய அரசியல் சக்தியாக பரிணமித்து நிற்கின்றதென்று அக்கட்சியின் யாழ். மாநகர சபை உறுப்பினர் சொல்லின் செல்வர் இரா. செல்வவடிவேல் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கப் பிரதிநிதிகளை காரைதீவில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உள்ளூராட்சித் தேர்தல் என்பது, அபிவிருத்தியை நோக்கிய தேர்தலாகும். எம்மைப் பொறுத்தவரையில் நாம் மூன்று கோஷங்களை மக்கள் முன்னிலைக்கு வைத்திருந்தோம். வட்டாரங்களின் அபிவிருத்தி, பிரதேசங்களின் அபிவிருத்தி, அரசியல் பிரச்சினைக்கான தீர்வு முயற்சி ஆகியனவே அவையாகும்.
“யாழ். மாவட்டத்தில் 81 வட்டாரங்களை நாங்கள் வெற்றிபெற்றிருக்கின்றோம். இதே எண்ணிக்கையில்தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஆசனங்களை பெற்றிருக்கின்றது. ஆனால், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மொத்தமாக 98 ஆசனங்களைப் பெற்று எமது கட்சி இரண்டாவது இடத்தில் உள்ளது.
“மேலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எமது கட்சிக்குக் கிடைத்திருந்த வாக்குகளைவிட குறைந்தது மூன்று மடங்கு வாக்கு பலம் எமக்கு தற்போது இருப்பது, கடந்த உள்ளூராட்சி தேர்தலில் நிரூபணம் ஆகியுள்ளது. இதை மாற்று கட்சியினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
“ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மக்கள் நலன் சார்ந்த பொது வேலை திட்டங்களை முன்னெடுக்கின்றதென்று எமது மக்கள் விசுவாசிக்கின்றமையே இம்மகத்தான வெற்றிக்குக் காரணமாகும். இவ்விசுவாசத்துக்கு ஏற்ற வகையில் நாங்கள் தொடர்ந்து செயற்படுவோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago