2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

தப்பி ஓடிய சந்தேகநபர்

Freelancer   / 2024 டிசெம்பர் 21 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை - சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று தப்பி ஓடியுள்ளார்.

தப்பி சென்ற சந்தேக நபரை பொலிஸார் உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

சம்மாந்துறை உடங்கா 02 பகுதியைச் சேர்ந்த ரிசாட் முகம்மட் சாதிக் என்ற 28 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரே இவ்வாறு தப்பி சென்றுள்ளார்.

கடந்த 07 ஆம் திகதி குறித்த சந்தேகநபர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்ததுடன் சம்பவம் தொடர்பில்  விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .