Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 28, செவ்வாய்க்கிழமை
Janu / 2024 ஜூன் 12 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொத்துவில் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
பொத்துவில் 07ஆம் பிரிவு , சென்ட்ரல் வீதியைச் சேர்ந்த மொஹமட் ரஹீம் உவைஸ் பாத்திமா மிஹியுரி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குழந்தைகளின் தாய் , சிறுமியின் உடலைக் கழுவுவதற்காக வீட்டின் பின்புறமுள்ள குழாயின் அருகில் உள்ள தண்ணீர் நிரம்பிய தொட்டியில் குழந்தையை நிற்க வைத்து சவக்கார கட்டியை எடுத்துக்கொண்டு வர சென்றுள்ளார். அப்போது மற்றைய குழந்தை சமையலறையில் நின்று அழுது கொண்டிருந்துள்ளது .
பின்னர், சவக்காரத்தை எடுத்துக்கொண்டு வெளியில் இருந்த குழந்தையின் அருகில் வந்தபோது, குறித்த குழந்தை தலைகீழாக விழுந்து, தலை தண்ணீரில் மூழ்கிய நிலையில் காணப்பட்டுள்ளதாக குழந்தையின் தாய், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார் .
பிரதேச மக்களின் உதவியுடன் குழந்தையை பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் அப்போதும் குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் .
மேலும் , இந்த இரட்டையர்களின் தந்தை வெளிநாட்டில் பணியாற்றி வருவதாகவும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago