2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

‘த.தே.கூ., ரணிலுக்குச் சார்பாக செயற்படவில்லை’

வி.சுகிர்தகுமார்   / 2018 நவம்பர் 27 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரணிலுக்குச் சார்பாக தாங்கள் செயற்படவில்லை எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், “இந்த நாட்டிலே ஜனநாயகம் ஏற்படவேண்டும் என்பதற்காகவே பிரதமருக்கு எதிரான பிரேரணைக்கு வாக்களித்தோம்” என்றார்.

அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேசத்தில், நேற்று (26) இடம்பெற்ற திருநீலகண்டர் சைவ மகா சபையின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.

மகாசபையின் தலைவர் மா.தயாளன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், க.துரைரெட்ணசிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கோடீஸ்வரன் எம்.பி, இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், தாம் எப்போதும் ரணிலுக்கோ, மஹிந்தவுக்கோ, ஜனாதிபதி மைத்திரிக்கோ ஆதரவாகச் செயற்படவில்லை என்றும் எதிர்காலத்தில் ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையும் கொண்டுவரப்படலாம் என்றும் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் விலை போகாதவர்களாக இருக்கின்றோம் என்றும் மக்கள் நலனுக்காகவே போராடுகின்றவர்களாக இருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வு தொடர்பாகவே போராடி வருவதாகவும் இந்த நாட்டிலே நிலையான சமாதானம் உருவாகி, அதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தத் தீர்வு காணப்பட வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, மக்களை அழித்துவிட்டு, மண்ணை முத்தமிட்ட ஒருவர் மீண்டும் பிரதமர் வேசம் போட்டு வரக்கூடாது என்பதே, தமது நிலைப்பாடு என, இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .