Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
Editorial / 2018 ஜனவரி 29 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.கே.றஹ்மத்துல்லா, பைஷல் இஸ்மாயில்
அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் என்றுமில்லாதவாறு டெங்குக் காய்ச்சல் தீவிரமடைந்து வருவதாக, அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எல்.அலாவுதீன் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலமும் அட்டாளைச்சேனை பிரதேச சபையும் இணைந்து, இன்று (29) காலை மேற்கொண்ட டெங்கு ஒழிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில், அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“டெங்குக் காய்ச்சலால், கடந்த 27 நாட்களில் 26 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 20 பேருக்குக் காய்ச்சலின் தாக்கம் இருப்பதை, வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
“இவ்வருடத்தின் ஆரம்ப காலப்பகுதியில் நாடு முழுவதுமாக 4,926 டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
“பருவப் பயிற்சி கால மழை காரணமாக, இந்த டெங்குக் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதாகவும், இதனைக் கட்டுப்படுத்தும் வகையில், அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை துரித நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
“கடந்த வருடம் நாடு முழுவதும் 1 இலட்சத்து 60 ஆயிரம் பேர் டெங்குக் காய்ச்சலாம் பாதிக்கப்பட்டனர். அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் 80 பேர் பாதிப்புக்குள்ளாகினர்.
“அட்டாளைச்சேனை பிரதேசத்தின் 05, 09, 10ஆம் பிரிவுகளிலேயே டெங்கு குடம்பிகளில் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுவதுடன், அதிகளவிலான டெங்கு நோயாளர்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
27 Apr 2025
27 Apr 2025
27 Apr 2025