2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

சௌபாக்கியா வீடு பயனாளியிடம் ஒப்படைப்பு

Princiya Dixci   / 2022 மார்ச் 24 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு

சமுர்த்தி சௌபாக்கியா வாரத்தை முன்னிட்டு, திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் தம்பட்டை 02 கிராமத்தில் புதிய வீடு, பயனாளிடம் இன்று (24) ஒப்படைக்கப்பட்டது.

இந்நிகழ்வு, திருக்கோவில் சமுர்த்தி தலைமை முகாமையாளர் பி.பரமானந்தம் தலைமையில் நடைபெற்றது.

இவ் வீட்டுத் திட்டம், சமுர்த்தித் திணைக்களத்தின் சமுர்த்தி சௌபாக்கியா வேலைத்திட்டத்தின் ஊடாக, திருக்கோவில் பிரதேச சமுர்த்தி பிரிவில் வீடற்று வாழ்ந்து வந்த குடும்பம் ஒன்றுக்கு நிர்மானிக்கப்பட்டு, வைபவ ரீதியாக பயனாளிடம் ஒப்படைக்கப்பட்டது.

நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு, புதிய வீட்டை பயனாளியிடம் ஒப்படைத்தார்.

சிரேஷ்ட சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.அரசரெத்தினம், கருத்திட்ட முகாமையாளர் பி.கமலேஸ்வரன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X