2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

சௌபாக்கிய வீடு ஒப்படைப்பு

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 04 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் “சௌபாக்கிய இல்லம்” எனும் வேலைத்திட்டத்தின் கீழ், வறிய வீடற்ற சமுர்த்திப் பயணாளிகளுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் திட்டத்தின் கீழ், சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் நிதியுதவியுடன், அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் கையளிக்கும் நிகழ்வு, இன்று (04) நடைபெற்றது.

அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸான் அதிதியாக கலந்துகொண்டு தெரிவுசெய்யப்பட்ட பயணாளிகளுக்கு நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடுகளை ஒப்படைத்தார். 

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் தலா 02 இலட்சம் ரூபாய் நிதியுதவியுடனும், பயனாளிகளின் பங்களிப்புடனும் 02 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டதாக, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸான் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் கே. தோஸினிதாஜ், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் யூ.கே.எம். நளீம், திட்ட முகாமையாளர் ஏ.எம். ஹமீட், வலய முகாமையாளர்கள் உட்பட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .