2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

சோலைவரி அறவீடு தொடர்பில் அறிவிப்பு

Editorial   / 2022 ஜனவரி 31 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அக்கரைப்பற்று மாநாகர சபையின் ஆட்சி அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களிடமிருந்து சோலைவரியை அறவீடு செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆணையாளர் ஏ.ரீ.எம். றாபி, இன்று (31) தெரிவித்தார்.

1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க உள்ளூராட்சி கட்டளைச் சட்டத்துக்கு அமைவாக, அக்கரைப்பற்று மாநகர சபை அதன் ஆட்சி அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களால் செலுத்தப்பட வேண்டிய சோலைவரியை செலுத்துமாறு, ஒவ்வொரு குடியிருப்பாளர்களுக்கும் தனித்தாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மாநகர சபைக்குச் செலுத்த வேண்டிய சோலை வரி நிலுவைத் தொகை முழுவதையும் குறிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் செலுத்துமாறு, குடியிருப்பாளர்கள் கேட்கப்பட்டுள்ளனர்.

மேலும், செலுத்தப்படாதுள்ள சோலைவரி நிலுவை தொகை முழுவதையும் குறித்த காலப்பகுதிக்குள் செலுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X