2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

சைக்கிள் திருட்டு அதிகரிப்பு

Princiya Dixci   / 2022 மே 29 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அஸ்வர்

சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சாய்ந்தமருது பிரதேசத்தில் அண்மைக்காலமாக இனந்தெரியாத நபர்களால் மோட்டார் சைக்கிள்கள் உட்பட அதன் உதிரிப்பாகங்கள் திருடப்பட்டு வருவதாகவும், பாடசாலை மாணவர்களின் சைக்கிள்கள் காணாமற்போவதாகவும் அதிகமான  முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சாய்ந்தமருது பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இத்திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்  எனவும் தமது  சைக்கிள்களை உரிய முறையில் பூட்டி பாதுகாப்பாக வைத்திருக்குமாறும், பொலிஸார் கேட்டுள்ளனர்.

அத்துடன், வெளியிடங்களிலிருந்து பல்வேறு தேவைகளுக்காக வந்து இங்கு தங்கியிருப்போர  பற்றிய விவரங்களை பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறும் இத்திருட்டுச் சம்பவங்களைக் கண்டுபிடிக்கும் வகையில் பொலிஸாருக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறும், பொதுமக்களுக்கு சாய்ந்தமருது பொலிஸார் பகிரங்க அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .