Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 மே 27 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறாவூர் நகர சபையின் அனைத்து சுகாதார தொழிலாளர்கள், வேலையாட்கள் மற்றும் சாரதிகள், நேற்று (26) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஏறாவூர் நகர சபையின் செயலாளரது தவறான அணுகுமுறையைக் கண்டித்தே, இந்த வேலைநிறுத்தப் போராட்டமும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது என, ஊழியர்கள் தெரிவித்தனர்.
இந்தப் போராட்டத்தின் காரணமாக, ஏறாவூர் நகர சபைப் பிரதேசத்தில் திண்மக்கழிவகற்றும் நடவடிக்கைகள், நேற்று நடைபெற்றிருக்கவில்லை.
பணியாற்றும் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் உரிய காலப்பகுதியில் வழங்கப்படாமை, சீருடைகள் விநியோகிக்கப்படாமை, பத்து மாதகால இடர்கடன் வழங்கப்படாமை மற்றும் செயலாளரும் நிதியுதவியாளரும் ஊழியர்களுடன் கடுமையாக நடந்துகொள்வதோடு தகாத வார்த்தைப்பிரயோகம் செய்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் இதன்போது முன்வைக்கப்பட்டிருந்தன.
இதன்போது, நகரசபையின் முதல்வர் இறம்ழான் அப்துல் வாசித் மற்றும் உப தவிசாளர் எம்எல். றெபுபாசம் ஆகியோர், சம்பவ இடத்துக்கு வருகை தந்து, ஊழியர்களது பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்ததோடு, அங்கு ஊழியர்களால் வழங்கப்பட்ட மகஜரையும் ஏற்றுக்கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago
4 hours ago