2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

சுகாதாரத்தை மீறினால் கடுமையான சிக்கல்தான்

Editorial   / 2022 ஏப்ரல் 24 , பி.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எம்.எஸ்.எம். ஹனீபா

அக்கரைப்பற்று சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட பிரதேசங்களில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத உணவகங்கள், விற்பனை நிலையங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அக்கரைப்பற்று சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ. காதர்    தெரிவித்தார்.

உணவகங்கள், உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் பாவனைக்கு உதவாத உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாக பொது மக்களால் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

  விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பாவனைக்குதவாத உணவுப் பண்டங்கள்,   காலவதியான பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டு அழித்தொழிக்கப்பட்டு வருவதாடு, உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X