2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

சிறுவனை துஸ்பிரயோகம் செய்தவர் சடலமாக மீட்பு

Freelancer   / 2022 மே 28 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

பெரியநீலாவணை பகுதியில் சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக தேடப்பட்ட  மின்சார சபை உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை(26) வழமை போன்று மட்டக்களப்பு மாவட்டம் கல்லடி இலங்கை மின்சார சபை காரியாலயத்தில் கடமையாற்றும் 57 வயதான   நுகர்வோர் ஒருங்கிணைப்பாளர் ஒருவர், கடமை நிமிர்த்தம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள வீடொன்றிற்கு   சென்று மின்மானியை  பரீட்சித்துள்ளார்.

பின்னர் அந்த வீட்டில் தாயுடன் நின்ற  9 வயது மதிக்கத்தக்க சிறுவனை அருகில் உள்ள வீட்டின் மின் மானியை பார்வையிட  அழைத்து சென்றுள்ளதுடன்  அங்கு சிறுவனுடன் பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்டு தப்பி  சென்றுவிட்டார்.

பின்னர் சிறுவன் தனக்கு நடந்த அனைத்து விடயங்களையும் தனது பெற்றோரிடம்  கூறியுள்ளார்.

இதனால்  குறித்த மின்சார சபை ஊழியர் தனக்கு எதிராக பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதை அறிந்து,  நேற்று அதிகாலை தனது வீட்டின்  அறையில்  இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இதனை அடுத்து அவரை மீட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதும், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிட்டன.

பிரேத பரிசோதனைகளின் பிரகாரம்  கழுத்து பகுதி சுருக்கினால் இறுகியதால்  மூச்சுத் திணறி  இறப்பு சம்பவித்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டு உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு  திருமணமாகி  இரு பிள்ளைகளும் இருக்கின்றனர்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பில்  பெரியநீலாவணை  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X