Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 பெப்ரவரி 06 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை, வளத்தாப்பிட்டிப் பிரதேசத்தில் 06 வயதுச் சிறுமி ஒருவரை, பாலியல் துஷ்பிரயோகத்துக்குபடுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபரொருவரை, எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, சம்மாந்துறை நீதவான் எச்.எம்.எம். பஸீல், நேற்று (05) உத்தரவிட்டார்.
வீடு கட்டுமாணப் பணியில் நேற்று முன்தினம் (04) ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவர், குறித்த சிறுமியின் தாய், மரண வீடொன்றுக்குச் சென்ற வேளையில், தனிமையில் இருந்த சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சிறுமியின் தாயாரால், சம்மந்துறை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, சந்தேகநபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம். பஸீல் முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமி, சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
27 Apr 2025
27 Apr 2025
27 Apr 2025