2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்: 2 சிறுவர்களுக்கு விளக்கமறியல்

Freelancer   / 2022 ஜூன் 01 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கனகராசா சரவணன்)

அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 11 வயது  சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 16 வயது சிறுவர்கள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிமன்ற நீதவான் நேற்று செவ்வாய்க்கிழமை (31) உத்தரவிட்டார்.

அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள 11 வயதான சிறுமி ஒருவர் சம்பவதினமான கடந்த 23 ம் திகதி தனது குடும்பத்துடன் கடற்கரைக்குச் சென்றுள்ள நிலையில்,  இடைநடுவே குறித்த சிறுமியின் மூத்த சகோதரி வீடு செல்ல நேரிட்டமையினால், ஏனைய உறவினர்கள் கடற்கரையில் வீற்றிருக்க விளையாடிக் கொண்டிருந்த 11 வயதான சிறுமியை சகோதரியின் பாதுகாப்பிற்காக வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

தனது சகோதரியை வீட்டிற்கு கொண்டு சென்று விட்டுவிட்டு 11 வயதான சிறுமி தனிமையாக மீண்டும் கடற்கரைக்கு இரவு 10.30 மணிக்கு தனியாக திரும்பிக் கொண்டிருந்தபோது வீதியின் இடைநடுவில் சிறுமியை இடைமறித்த இரு சிறுவர்களும் அவரின் வாயை கையினால் பொத்தி அருகில் உள்ள வீட்டிற்கு தூக்கி சென்று அங்கு ஒருவர் வெளியில் காவல் இருக்க மற்றையவர் அந்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

பின்னர் வீட்டிற்குள் ஒருவர் உள்வரும் சத்தம் கேட்டு அந்த சிறுமியை மிரட்டி யாரிடமும் சொல்ல வேண்டாம், மீண்டும் கூப்பிட்டால் வர வேண்டும் என தெரிவித்து சிறுமியை மதிலுக்கு மேலால் தூக்கிப் போட்டுள்ளனர்.என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது 

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் முறைப்பாடு செய்ததையடுத்து,  சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன்  16 வயதுடைய இருவரை கைது செய்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (31) ஆஜர்படுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து,  இருவரையும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X