2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

சிரேஷ்ட ஊடகவியலாளருக்கு இரட்டை அரச விருதுகள்

Editorial   / 2018 ஒக்டோபர் 25 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருதமுனை சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் 2018ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண உயர் விருதான வித்தகர் விருது, அரச உயர் விருதான கலாபூஷணம் விருது ஆகிய இரு அரச விருதுகளை பெறுகின்றார்.

திருகோணமலையில், நாளை மறுநாள் (27)  வித்தகர் விருதினையும் கலாபூஷணம் விருதினை டிசம்பர் மாதம் 15ஆம் திகதி கொழும்பிலும் பெறவுள்ளார்.

ஊடகம், இலக்கியப் பணிகளில் கடந்த 30 வருடங்களாக  ஈடுபட்டு கவிதை, கட்டுரை, விமர்சனம் உள்ளிட்ட பல்வேறு படைப்புக்களை சமூக மேம்பாட்டுக்காக எழுதி வெளியிட்டுள்ளார்.

1988ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 'அன்னை' என்ற தலைப்பில் கவிதை ஒன்றை எழுதி அக்கவிதை பத்திரிகையில் பிரசுரமானது முதல் எழுத்துலகில் பிரவேசித்தார்.

இவர் தென்னிந்தியாவைச் சேர்ந்த மர்ஹூம் பத்துமுகம்மது ராவுத்தர் பீர்முகம்மது மருதமுனையைச் சேர்ந்த இஸ்மாலெப்பை ஆமினா உம்மா தம்பதியின் இரண்டாவது புதல்வராவார்.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .