2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

சாய்ந்தமருதில் இரு வீதிகளுக்கு அமைச்சர் மனோ ரூ. 4 மில். ஒதுக்கீடு

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2018 ஒக்டோபர் 21 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாய்ந்தமருது ஐந்தாம் பிரிவிலுள்ள மேர்சா வீதி, ஒன்பதாம் பிரிவிலுள்ள பழைய தபாலக வீதி என்பவற்றின் புனரமைப்புக்காக, தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், தனது அமைச்சின் ஊடாக நான்கு மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

அமைச்சர் மனோ கணேசனின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரான கே.ஆர்.றிஸ்கான் முஹம்மட் விடுத்த வேண்டுகோளையேற்றே, அவர் இந்நிதியொதுக்கீட்டை மேற்கொண்டுள்ளார்.

இவ்வீதிகளின் புனரமைப்புப் பணிகள் விரைவில் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தனது வேண்டுகோளின் பேரில் சாய்ந்தமருது பிரதேசத்தில் மேலும் இரண்டு வீதிகளின் புனரமைப்புக்கு நிதியொதுக்கீடு செய்வதற்கு, அமைச்சர் மனோ கணேசன் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும், றிஸ்கான் முஹம்மட் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .