2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

சாய்ந்தமருதில் 9 வீடுகள் கையளிப்பு

Freelancer   / 2023 மார்ச் 17 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் 2022ஆம் ஆண்டுக்கான செளபாக்கியா வீடமைப்பு திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட  சமூர்த்தி பயனாளிகளுக்கான வீடுகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு, சாய்ந்தமருதில் நடைபெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல்.ஜஃபரின் ஏற்பாட்டிலும், சமுர்த்தி தலைமைப் பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீமின் நெறிப்படுத்தலிலும் பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக்கின் தலைமையிலும் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்ராஸ் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு வீட்டை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

மேலும், அதிதிகளாக சமுர்த்தி மகாசங்க  முகாமையாளர் ஏ.எல்.யூ.ஜூனைதா, சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் றியாத். ஏ. மஜீத், பிரிவுக்கான சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 

இத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் 9 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .