Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 05 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
துஷாரா
சிறு தேசியக் கட்சிகளும் சுயநல எண்ணம் கொண்ட தலைமைத்துவங்களுமே எமது மக்களின் சாபக்கேடாகுமெனத் தெரிவித்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் பீ.எச்.பியசேன, “இதனை மாற்றியமைக்க, நல்ல தலைமைத்துவத்தின் கீழ், நாம் ஒன்றிணைவோம்” என்றும் தெரிவித்தார்.
இதன்மூலம், வறுமையற்ற சுபீட்சம் நிறைந்த வளமுள்ள நாடாக எமது நாட்டை மாற்றியமைக்கவும் கட்டியெழுப்பவும் முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
கல்குடாத் தொகுதி, மட்டக்களப்புத் தொகுதி, பட்டிருப்புத் தொகுதி ஆகிய பகுதிகளில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு கிராமம், வட்டாரம் ஆகிய பகுதிகளுக்கு அமைப்பாளர்களை அமைத்துக் கொள்வதற்கான கலந்துரையாடல், குறித்த பெரமுனவின் அக்கரைப்பற்று தலைமைக் காரியாலயத்தில் இன்று (05) இடம்பெற்றது.
இங்கு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கால காலமாக சுயநல எண்ணம் கொண்டு, போக்குக் காட்டி அரசியல் செய்யும் தலைமைத்துவங்களை நம்பி, தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறார்கள். இந்த விடயங்களை உலகமே அறியும்.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக, மக்களைக் கேடயமாகவும் ஆயுதமாகவும், இனவாதிகளாகவும் மாற்றி, அவர்களைப் பயன்டுத்தி வருகின்றார்கள்.
“இவர்கள் மக்களுக்குச் சேவை செய்ய விரும்பாதவர்கள் என்பதை எம்மக்கள் இன்னும் அறியாதவர்களாக இருந்து வருகின்றார்கள்” என அவர் தெரிவித்தார்.
அத்துடன், “தலைமைகள் தங்களது இருப்பை தக்கவைக்க முயன்றதே தவிர, மக்களைக் காக்கவோ, அபிவிருத்திச் செய்யவோ ஒருபோதும் முயன்றதே இல்லை.
“கடந்த காலங்களில் நாம் செய்த தவறுகளை எண்ணிக்கொண்டிருக்காமல், இனிவரும் காலங்களில், எமது மக்களின் முன்னேற்றத்துக்காக நாம் ஒன்றிணைவோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago