2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

சாதனை மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

Freelancer   / 2022 ஜூன் 06 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (ஏ.எல்.எம்.ஷினாஸ்)

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனை கோட்டத்திலுள்ள, பாடசாலைகளில் தரம் ஐந்து  புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 145 மாணவர்களையும், அவர்களுக்கு கற்பித்த 46 ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு ஏ.ஆர்.மன்சூர் பௌண்டேசன் அனுசரனையில்,  கல்முனை கோட்டக்கல்வி பணிப்பாளர் வி.எம்.ஸம்சம் தலைமையில், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி ஆராதனை மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஏ.ஆர்.மன்சூர் பௌண்டேசன் ஸ்தாபகத் தலைவியும் சட்டத்தரணியுமான மரியம் நளிமுத்தீன் (அவுஸ்திரேலிய முஸ்லிம் பெண்கள் கவுன்சிலின் செயலாளர்) அவர்களும், கௌரவ அதிதிகளாக டொக்டர்.எஸ்.நஜிமுத்தீன்,  கல்முனைப் பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் திட்டமிடல் பணிப்பாளர்  எம்.சி.எம்.மாஹிர், கல்முனை வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபிர் ,  விஷேட அதிதிகளாக கல்முனை வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் வை.ஏ.கே.தாஸிம் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள், பிரதி அதிபர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

2021 ஆம் ஆண்டில் தரம் ஐந்து  புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த  145 மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்களும், சான்றிதழ்களும் வழங்கியதோடு, கற்பித்த 46 ஆசிரியர்களுக்கும் நினைவு சின்னங்களும்  வழங்கிவைக்கப்பட்டன.

மேலும் இந்நிகழ்வில்,  ஏ.ஆர்.மன்சூர் பௌண்டேசன் மகோன்னத சேவைகளினை பாராட்டும் முகமாக, கல்முனை வலயக்கல்வி கோட்ட அதிகாரிகள் மற்றும் அதிதிகளினால்  ஏ.ஆர்.மன்சூர் பௌண்டேசன்   ஸ்தாபகத் தலைவியும், சட்டத்தரணியுமான  மரியம் நளிமுத்தீனுக்கு பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X