2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

சம்மாந்துறையில் அதிகமான தொழுநோயாளர்கள் அடையாளம்

Freelancer   / 2023 பெப்ரவரி 23 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

சம்மாந்துறை சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் அதிகமான தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தெரிவித்தார்.

சர்வதேச தொழுநோய் தினத்தை முன்னிட்டு, தொழுநோய் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விழிர்ப்புணர்வு கருத்தரங்கு, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று (22) நடைபெற்றது. 

இதில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“எதிர்காலத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் பிரதேச ரீதியாக தொழுநோய் தொடர்பான ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. தொழு நோயாளர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு சிகிச்சையளித்து, தொற்றுப் பரவலை தடுப்பதற்கான திட்ட வரைபுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

“தொழுநோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு எல்லோரும் செயற்பட வேண்டும். அப்போதுதான் எமது பிராந்தியம் தொழு நோய் அற்ற பிராந்தியமாக காணப்படும்” என்றார். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .