2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

சம்மாந்துறை பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் தெரிவு

Freelancer   / 2023 பெப்ரவரி 15 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்  பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவாகியுள்ளார்.

சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னைய தவிசாளர் இராஜினாமா செய்தமையினால் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக்கான விசேட அமர்வு, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் தலைமையில், சபா மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்றது. 

இந்த அமர்வில் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் பெயர் மாத்திரமே தவிசாளர் பதவிக்காக முன்மொழியப்பட்டது. இதனால் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணனினால்  ஏகமனதாக சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளராக ஐ.எல்.எம்.மாஹிரின் பெயரை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 6 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 2 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் 2 உறுப்பினர்கள் உள்ளிட்ட  10 உறுப்பினர்கள்   சபைக்கு சமூகமளித்தனர். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X