2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

சமையல் எரிவாயு கொள்வனவில் மக்களின் பணம் சுரண்டல்

Princiya Dixci   / 2022 மே 22 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

நாட்டில் நிலவும் தட்டுப்பாடு காரணமாக சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்ள மக்கள் கடுமையான நெருக்கடியை அனுபவித்து வருகின்றனர்.

அதனடிப்படையில், சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் இன்று (22) காலை முதல் சமையல் எரிவாயு லிற்றோ கேஸ் நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்டது. வெயிலையும் கவனத்தில்கொள்ளாது மக்கள் நீண்டவரிசையில் நின்று எரிவாயுவை பெற்றனர்.

எனினும், 12.5kg சமையல் எரிவாயு 4,970 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தும் மக்களிடமிருந்து 5,000 ரூபாய் அறிவிடப்பட்டது. இது தொடர்பில் கேள்வியெழுப்பிய போது, மிகுதியை கொடுக்க எங்களிடம் சில்லறை இல்லையென பிராந்திய விற்பனை முகவர் தெரிவித்தார்.

இதனால் பலத்த சலசலப்பு உருவாகியது.

மக்களிடம் இருந்து ஒருவருக்கு 30 ரூபாய் வீதம் பகல் கொள்ளையிடப்படும் இந்த பணத்தால் மொத்தமாக ஒரு பாரிய தொகை இறுதியில் சேரும் என்றும் மக்கள் விசனம் தெரிவித்தனர்.

ஏற்கெனவே விலை அதிகரித்திருப்பதை தாங்கமுடியாமல் திணறும் நாங்கள் இப்போது வெயிலில் காத்திருந்து பகல் கொள்ளைக்கு ஆளாக வேண்டி உள்ளதாகவும் அங்கலாய்த்தனர்.

இது தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபைக்கு பொதுமக்களால் தொலைபேசியூடாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X