Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
அஸ்லம் எஸ்.மௌலானா / 2018 ஜூலை 03 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை பொதுச் சந்தை வர்த்தகர்கள் தொடர்பில் மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ள சில விடயங்கள் உண்மைக்குப் புறம்பானவை எனவும் அவற்றை நாம் அடியோடு மறுக்கின்றோம் எனவும் கல்முனை சந்தை வர்த்தகர் சங்கம் தெரிவித்துள்ளது.
சந்தையில் அமைந்துள்ள தமது வர்த்தக சங்க அலுவலகத்தில் இன்று (03 ) பிற்பகல் நடத்திய ஊடகச் சந்திப்பில் சங்கத் தலைவர் ஏ.பி.ஜமாலதீன், செயலாளர் ஏ.எல்.கபீர் ஆகியோர் மறுப்புத் தெரிவித்தனர்.
இது தொடர்பில் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், கல்முனை பொதுச் சந்தை வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில், கடந்த 01 ஆம் திகதி இடம்பெற்ற வர்த்தகர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கல்முனை மாநகர முதல்வர் ஆற்றிய உரையின்போது, சந்தைக் கடைகளை சில வர்த்தகர்கள் தமது பிள்ளைகளுக்குச் சீதனமாக கொடுத்திருப்பதாகவும் ஒரு கடையை, ஐம்பது இலட்சம் ரூபாய் முற்பணத்துடன் ஐம்பதாயிரம் ரூபாய் மாத வாடகைக்குக் கொடுப்பதற்காக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருப்பதாக ஆளுநர் தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்த கருத்துகள் ஊடகங்களில் வெளிவந்திருப்பது எமது வர்த்தகர்கள் மத்தியில் பெரும் கவலையையும் மனக்கிலேசத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தனர்.
இது விடயமாக நேற்று தாம் முதல்வருடன் தொடர்பு கொண்டு விடயங்களைத் தெளிவுபடுத்தியதாகக் குறிப்பிட்ட அவர்கள், தாங்கள் கூறிய குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் கிடையாது என தமது மறுப்பையும் ஆட்சேபனையையும் தெரிவித்ததாகவும் அதனை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார் என்றும் தெரிவித்தனர்.
தனக்குக் கிடைக்கப் பெற்ற தகவல்களை அடிப்படையாக கொண்டே தான் இக்கருத்துகளை தெரிவித்ததாகவும் இவை தவறானவை என்பதை தற்போது புரிந்துகொண்டுள்ளதாகவும் முதல்வர் தம்மிடம் வருத்தம் தெரிவித்துள்ளார் என்பதை அறியத்தருவதாகவும் கல்முனை சந்தை வர்த்தக சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
25 minute ago
30 minute ago
58 minute ago