2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்

Freelancer   / 2023 பெப்ரவரி 23 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்,  கல்முனை நீதிமன்ற வளாகத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் 2023/24ஆம் ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது. 

இதில் தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஐ.றைசுல் ஹாதி போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார். 
அத்துடன், செயலாளராக கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம். றோஸன் அக்தரும், பொருளாளராக சட்டத்தரணி ஏ.ஜி. பிரேம்நவாத்தும் தெரிவு  செய்யப்பட்டனர்.

மேலும், உப தலைவர்களாக சிரேஷ்ட சட்டத்தரணி அன்ஸார் மௌலானா, சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிவரஞ்சித், கல்முனை மாநகர சபை உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி ஆரிகா காரியப்பர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். 

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் வரலாற்றில் முதலாவது பெண் உப தலைவராக தெரிவுசெய்யப்பட்டவர் சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி ஆரிகா காரியப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .