Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 01, புதன்கிழமை
Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 04 , பி.ப. 04:34 - 0 - 31
எம்.எஸ்.எம். ஹனீபா
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் இதுவரை கொவிட்-19 தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ், இன்று (04) தெரிவித்தார்.
தற்போது நாட்டில் கொவிட்-19 வைரஸ் தொற்று மீண்டும் காணப்படுவதால், சுகாதார வைத்தியாதிகாரி அலுவலகங்களுக்குச் சென்று தங்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
முதலாவது தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள், இரண்டாவது தடுப்பூசியையும், இரண்டாவது தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் மூன்றாவது தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
பொதுச் சுகாதார பரிசோதகர்களை தொடர்புகொண்டு இத் தடுப்பூசிகளை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகங்களில் ஏற்றிக்கொள்ளுமாறு தெரிவித்தார்.
மக்கள் கனிசமாக ஒன்று கூடுவது, முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளி போன்ற சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் கவனயீனமாக நடந்து கொண்டால் எதிர்காலத்தில் பாரிய பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
ஆகவே, இவற்றை கருத்திற்கொண்டு மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டுமென அவர் கேட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago