Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 நவம்பர் 21 , பி.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட மாடு அறுக்கும் கொல்களத்தை அகற்றுமாறு, பிரதேச பொதுமக்கள், மனு மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லாஹ்வுக்கு, இன்று (21) அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அட்டாளைச்சேனை, 16ஆம் பிரிவில் தைக்கா நகர்ப் பிரதேசத்தில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பராமரிப்பிலுள்ள மாடு அறுக்கும் இடத்துக்கு அருகாமையில் மாட்டின் கழிவுகள் சீரான முறையில் அகற்றப்படாமையால் துர்நாற்றம் வீசுவதோடு, நாய்த்தொல்லையும் அதிகரித்துக் காணப்படுவதோடு, அருகில் உள்ள ஆறும் மாசடைந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்துக்கு அருகாமையில் குடியிருப்புகள், பள்ளிவாசல் என்பன காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் மாடறுக்கும் இக்கொல்களத்தை வேறிடத்துக்கு மாற்றுவதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எனினும், இதுவரை எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையெனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, இம்மாடறுக்கம் இடத்தை வேறிடத்துக்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு, அம்மகஜரில் கோரப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago