Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2022 ஜனவரி 30 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர், எம்.எஸ்.எம். ஹனீபா
கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கடந்த சில நாள்களாக படிப்படியாக அதிகரித்து வருவதால் அனைவரையும் விரைந்து தடுப்பூசி ஏற்றுமாறு வலியுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி டொக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக், இன்று (30) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“2021 டிசெம்பர் மாதம் 1622 நோயாளர்களும் 17 மரணங்களும் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2022 ஜனவரி மாதம் 2,500 புதிய தொற்றாளர்களும் 25 மரணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
“உலக நாடுகள் உட்பட இலங்கையிலும் கொவிட்19 இன் புதிய வகை பிரழ்வான ஒமிக்ரோன் இதற்குக் காரணமாக இருக்கலாம். இக்கிருமியானது நோயாளிக்கு வெகுவாக பாதிப்பை ஏற்படுத்தாது எனக் கூறப்பட்ட போதிலும் மிக விரைவாக ஏனையோருக்குத் தொற்றக் கூடியது.
“எனவே, இவ்வகை தொற்றிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ள ஏற்கெனவே நாம் கூறுகின்ற பொதுவான கட்டுப்பாடுகளான சமூக இடை வெளிகளை பேணல், சரியான முறையில் முகக் கவசம் அணிதல், அடிக்கடி கைகளை சவர்க்காரம் இட்டு கழுவுதல் அத்தோடு, தேவையற்ற ஒன்றுகூடல்களைத் தவிர்த்தல், மரண வீடுகள், சடங்குகள், சமய சடங்குகள், திருமண வைபவங்களின் போது முகக் கவசங்களை அணிந்து செயற்படுவது அவசியமாகும்.
“மேலும், மூன்றாவது தடுப்பூசியான பைசர் தடுப்பூசியை 20 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஏற்றிக்கொள்வதுடன், 12 - 19 வயதுக்கு இடைப்பட்டவர்கள் பைசர் தடுப்பு மரூந்தை பெற்றுக் கொள்வதும் சிறந்ததாகும்.
“தடுப்பூசியில் ஏற்கெனவே இருந்த ஆர்வம் மக்கள் மத்தியில் குறைவடைந்து, ஆதாரமற்ற பொய் வதந்திகளை மக்கள் மத்தியில் பரப்பியமை தடுப்பூசியை பெறுவதில் சிக்கல் நிலைமை காணப்படுகிறது.
“எதிர்வரும் காலங்களில் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து மரண எண்ணிக்கையும் அதிகரிக்கும் போது, தடுப்பூசியை பெறாதவர்கள் கைசேதப்பட வேண்டி ஏற்படும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago