2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

கூட்டமைப்புக்குள் உள்ளக மாற்றங்கள் வேண்டும்

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 12 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ளக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் சாணக்கியன் போன்ற இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கி கூட்டமைப்பை வழிநடத்த வேண்டும் என்றும் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சங்கத்தின் கல்முனை தலைமையகத்தில் நேற்று (11)  ஊடகவியலாளர் சந்திப்பு மேற்கொண்டு, மேற்படி சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் இதனைத் தெரிவித்தார்.

அவர் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது, “தமிழ் மக்கள் கூட தமிழ்த் தலைமைகளை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. காரணம், அநேகமாக மக்கள் பிரச்சினை தீர்க்கப்படாமை ஆகும்.

“எதிர்கட்சி தலைவராக கடந்த காலங்களில் திருகோணமலை மாவட்டத்தில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இருந்து கொண்டு ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்கு ஆதரவாக செயற்பட்டவர்.

“எனவே தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுக்கோப்பு இல்லாமல் போய் உள்ளது. இதற்கு காரணம் தலைமைத்துவம் தான். சரியான வழிநடத்தல் இன்மையினால் தான் இந்நிலை கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழரசுக் கட்சிக்கு மாத்திரம் உரித்தானது என கடந்த கால செயற்பாடுகள் சென்று கொண்டிருக்கின்றன.

‘இனிவரும் காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒற்றுமையினை ஏற்படுத்துவது என்பது சிரமம்.

“ஆகவே தான், உலக தமிழ் மக்களும் தொழிற்சங்கங்களும் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவதை குறைத்து வருகின்றார்கள் என்பதே உண்மையாகும்.

“எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ளக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கி, கூட்டமைப்பை வழிநடத்த வேண்டும். சாணக்கியன் போன்ற இளைஞர்களுக்கு கட்சிக்குள் முன்னுரிமை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X